செவ்வாய், 26 அக்டோபர், 2010

தியேட்டர்கள் தட்டுப்பாட்டால் 70 புது சினிமா படங்கள் முடக்கம்

source:http://www.maalaimalar.com/2010/10/25114625/cinema.html


தியேட்டர்கள் தட்டுப்பாட்டால் 70 புது சினிமா படங்கள் ரிலீசாக முடியாமல் முடங்கியுள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்து சிறிய பட்ஜெட்டில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டன. பெரிய நடிகர்கள் படங்கள் அவ்வப்போது மொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமித்ததால் இவைகளை ரிலீஸ் செய்ய முடியவில்லை. மாதம் தோறும் எண்ணிக்கை கூடி தற்போது 70 படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கி யுள்ளன. இந்த படங்களை இந்த ஆண்டுக்குள்ளேயே ரிலீஸ் செய்து விட வேண்டுமென அப்படங்களின் தயாரிப்பாளர்கள் பெரு முயற்சி எடுக்கின்றனர். ஆனாலும் அவர்களால் தியேட்டர்களுக்கு கொண்டு வர முடியவில்லை. காரணம் சிறு படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தியேட்டர்கள் கிடைக்காத தால் அவற்றை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் படங்கள் முடங்கி கிடக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் பெரிய நடிகர்கள் படங்களை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களிலும் சிறு பட்ஜெட் படங்களை இதர நாட்களிலும் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால் அது கடை பிடிக்கப்படவில்லை.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெரிய ஹீரோக்களின் படங்களில் ரிலீசுக்கு வரிசை கட்டுகின்றன. எனவே இரு மாதங்களுக்குள் 70 படங்களும் தியேட்டர்களை எட்டி பார்க்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பெரிய பட்ஜெட் படங்களில் தனுசின் “உத்தமபுத்திரன்” தீபா வளிக்கு ரிலீசாகிறது. அவர் நடித்த “ஆடுகளம்”, “மாப்பிள்ளை” படங்களில் ஏதேனும் ஒன்றை டிசம்பர் 24-ல் ரிலீஸ் செய்ய திட்ட மிட்டுள்ளனர்.

ஆர்யா நடித்த “ரத்த சரித்திரம்” படம் நவம்பர் ரிலீசாகிறது. கார்த்தி நடித்த “சிறுத்தை” படத்தை டிசம்பர் 3 அல்லது 10-ந் தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஜீவாவின் “சிங்கம்புலி” நவம்பர் 19 அல்லது 26-ந்தேதியில் வெளியிட முடிவாகியுள்ளது.

ஆர்யா நடித்த “சிக்கு புக்கு” படம் நவம்பர் 19-ந் தேதி வெளியாகிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் எங்கேயும் காதல் படம் டிசம்பர் 3-ந்தேதி ரிலீசாகிறது.


கமலஹாசனின் மன் மதன் அம்பு டிசம்பர் 17-ந்தேதி வெளியாகிறது. விஜய் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளி வருகிறது. சிம்பு நடிக்கும் வானம் படம் டிசம்பர் 31-ந்தேதி ரிலீசாகிறது.

கருத்து

தமிழ் நாட்டில் சென்னை உட்பட பல திரையரங்கங்கள் தரமற்று இருக்கின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் பல திரையரங்குக மூடப்படும், திரையரங்கிற்கு தட்டுபாடு அதிகரிக்கும்.

அனால் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திரு.அபிராமி ராமநாதன் சொல்வது போல் தரமான, அதி நவீன வசதிகொண்ட, திரைஅரங்குகள் அதிகரித்து இந்த தட்டுபாட்டை போக்கும், அனால் சற்று காலதாமதமாகும்.

முக்கியமாக திருச்சி போன்ற சிறுநகரங்களில் உள்ள திரையரங்கங்கள் தங்களை மேம்படுதிக்கொள்ளவிட்டால் சில வருடங்களில் அவை திருமண மண்டபங்களாக மாறிவிடும்.

வெள்ளி, 29 மே, 2009

நயனை கைவிட்ட தயாரிப்பாளர்கள்

source:http://www.maalaimalar.com/2009/05/28130040/nayan.html



போன வருடம் குசேலன், சத்யம், ஏகன், வில்லு என ஏகப்பட்ட படங்களில் அதுவும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தவர் நயன்தாராதான். எல்லாமே சூப்பர் ப்ளாப் படங்கள். விளைவு, இந்த ஆண்டு அவருக்கு தமிழில் ஒரேயொரு படம்தான். சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன் தவிர வேறு படங்களே அவருக்கு இல்லை.

போதாக்குறைக்கு லிங்குசாமியுடன் கசமுசா, பிரபுதேவாவுடன் காதல் என கண்டபடி செய்திகள் வந்த வண்ணம் இருப்பதால் நயன் கலைச்சேவை போதுமப்பா, பிரஷ்ஷா யாரையாவது புக் பண்ணிக்கலாம் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கைவிடும் நிலைதான் இப்போது. இதைபுரிந்து கொண்ட நயன்தாரா உஷாராக தெலுங்கு மற்றும் மலையாள உலகில் வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள தொடங்கி விட்டாராம்.

மலையாளத்தில் அவர் நடிக்கும் பாடிகார்ட் முடிந்த கையோடு இன்னொரு மலையாள படம் நடிக்க வந்த வாய்ப்பை, சம்பளம் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார். தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற படத்தில் நடிக்கும் அவர் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்க வலியப்போய் ஒப்புக்கொண்டாராம்.

ஐஸ்வர்யாராய்போல் நடிப்பதாக பாராட்டுகள் குவிகிறது -அசின்

source: http://www.maalaimalar.com/2009/05/29112930/CNI0180290509.html
இந்தி கஜினி மூலம் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்த அசினுக்கு பட வாய்ப்புகளும் பாராட்டு கடிதங்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஐஸ்வர்யாராய் போல் நடிப்பதாக கடிதங்களில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களாம். இது பற்றி அசின் சொல்கிறார்:-



இந்தி கஜினி மூலம் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்த அசினுக்கு பட வாய்ப்புகளும் பாராட்டு கடிதங்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஐஸ்வர்யாராய் போல் நடிப்பதாக கடிதங்களில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களாம். இது பற்றி அசின் சொல்கிறார்:-

முதல் படத்திலேயே எல்லோருக்கும் அதிர்ஷ்டம் அமைவது இல்லை. ஆனால் எனக்கு கிடைத்தது. இந்தி கஜினிக்கு பின் பிரபலமான நடிகையாகி விட்டேன்.

ஐஸ்வர்யாராய் போல் என் நடிப்பு இருப்பதாக பாராட்டுகிறார்கள். அவரைப்போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்துகிறேன் என்கின்றனர். ஐஸ்வர்யாராய் சிறந்த நடிகை அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐஸ்வர்யாராய் அளவுக்கு நான் உயர்வேனா என்ற பயமும் ஏற்படுகிறது.

குறிப்பாக விளம்பரமொன்றில் நடித்துள்ளேன். டெலிவிஷன்களில் தற்போது அது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. அதை பார்த்ததும் நிறைய பாராட்டுகள் வருகின்றன.

நான் எவ்வளவுதான் உயர்ந்தாலும் எனது கால்கள் பூமியில்தான் இருக்கும்.

இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் தமிழ் திரையுலகம் தான். அதை ஒரு போதும் மறக்கமாட்டேன். தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கதை நன்றாக இல்லாததால் ஒப்புக்கொள்ளவில்லை.

19 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளேன். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது. அதில் கமலும் நடிக்கிறார். நான் மலையாள பெண்ணாக வருகிறேன். களரி சண்டை கற்றுத்தரும் மாஸ்டர் வேடத்தில் கமல் நடிக்கிறார். என் கேரக்டருக்கென்று தனியாக களரி சண்டை கற்று வருகிறேன்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கிளாமருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பது என் பாலிசி. இந்தி திரையுலகின் என் ரோல் மாடல் ஸ்ரீதேவி, அவரைப்போல் நடிக்க விரும்புகிறேன்.

காதல் பற்றி நிறையபேர் கேட்கின்றனர். நானும் ஒரு பெண்தான். என்னை காதலிப்பவர்களை நான் காதலிக்க முடியாது. இதுவரை என் மனதுக்குள் காதல் அலாரம் அடிக்கவில்லை. ஒரு வேளை என் பெற்றோர் பார்க்கிற பையனை பார்த்தால் அந்த அலாரம் அடிக்கலாம்.

இவ்வாறு அசின் கூறினார்.

வியாழன், 26 மார்ச், 2009

புதுமுக நடிகர்களுக்கு கிராக்கி வசூலை குவிக்கும் “சிறு பட்ஜெட்” படங்கள்

Source=http://www.maalaimalar.com/2009/03/25130156/CNI0340250309.html

தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் “சிறு பட்ஜெட்” படங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரை செலவிட்டு எடுத்து பல படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தின. தயாரிப்பாளர்கள் போட்ட முதலில் பாதி கூட எடுக்க முடியாமல் திணறினர். முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு வாரத்திலேயே சுருண்ட கதையும் உண்டு. ஆனாலும் பல கோடிகளை கொட்டி பெரிய படங்கள் எடுக்கவே புதிது புதிதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் முளைத்து ஒரு படத்திலேயே சூடு கண்டு ஒதுங்கின.

சிறு பட்ஜெட்டில் படங்கள் எடுக்க யாரும் துணியவில்லை. “சுப்பிரமணியபுரம்” படத்தின் வெற்றி திரையுலகையே புரட்டி போட்டது. “வெண்ணிலா கபடி குழு” படமும் நன்றாக ஓடியது. மேலும் பல சிறிய படங்கள் விநியோகஸ்தர்கள் கையை கடிக்காமல் சிறிதளவும் லாபம் ஈட்டி கொடுத்தன.

இதையடுத்து சிறு பட்ஜெட் படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அப்படங்களில் நடிக்க புதுமுக நடிகர்களுக்கும் கிராக்கி வந்துள்ளது.

ரோஹன் கிருஷ்ணா இயக்கிய “பட்டாளம்” படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டா போட்டி உள்ளது. குங்கும பூவும் கொஞ்சு புறாவும் என்ற சிறு பட்ஜெட் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


“அன்றொரு நாள்”, “சிரித்தால் ரசிப்பேன்” “முன்தினம் பார்த்தேனே”, “கதிர்வேல்”, “ஓடிப்போலாமா”, “சங்கரா”, “ரேணி குண்டா”, “குலசாமி”, “பிரம்மதேவா” “ஆடாத ஆட்டமெல்லாம்”, “பலம்”, “ரயிலு”, “வானம் பார்த்த சீமையிலே”, “தோரணம்”, “என் பெயர் குமாரசாமி”, “சங்கரன்கோவில்” உள்பட 75 சிறு பட்ஜெட் படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன. குறைந்த சம்பளம், தயாரிப்பில் சிக்கனம் என எடுக்கப்படும் இப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் முண்டியடிக்கிறார்கள். “சேட்டிலைட்” உரிமை மூலமும் இவை பணம் பண்ணி கொடுக்கின்றன.

புதன், 25 மார்ச், 2009

பொருளாதார நெருக்கடியால் தாமதம் மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடமாட்டேன் -கமலஹாசன்

Source: http://www.maalaimalar.com/2009/03/11150843/CNI0460110309.html

நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-


கேள்வி:- புது நடிகர்கள் நிறைய வருகிறார்களே?

பதில்:- இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆட்சி நீடித்தது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.
கே:- நடிகர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்களே? நீங்கள் வருவீர்களா?

ப:- நான் நடிகன் எனக்கு தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்கு தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

கே:- உங்கள் படங்கள் ஆஸ்கார் விருது பெறாததற்கு காரணம் என்ன?

ப:- எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது. ஏ.எஸ்.ஐ. முத்திரை தேவைஇல்லை.

கே:- ஹாலிவுட் படங்களில் நடிப்பீர்களா?

ப:- எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.

ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

கே:- மர்மயோகி என்ன ஆனது?

ப:- பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் பாக்கி உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எந்திரன் படப்பிடிப்பு ரஜினி ஸ்டைலில் வியந்தேன் -ஐஸ்வர்யாராய்

Source: http://www.maalaimalar.com/2009/03/24145640/CNI0400240309.html

ஷங்கர் இயக்கும் “எந்தி ரன்” படத்தில் ரஜினி-ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. அமெரிக்காவில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. வேலூர், பாலவாக்கம் பகுதிகளில் உள்ள எஞ்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.

இதையடுத்து ஐதராபாத்தில் தற்போது பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. சாரிசிரில் அதிக பொருட் செலவில் நடன அரங்கை அமைத்து கொடுத்துள்ளார். அதில் ரஜினி “ரோபோ” ஐஸ்வர்யாராய் ஆகியோர் சேர்ந்து நடனம் ஆடும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கல்கத்தாவில் “ராவணன்” படப்பிடிப்பை முடித்து விட்டு நேராக ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார் ஐஸ்வர்யாராய். பிரபுதேவா நடன பயிற்சி அளிக்கிறார். ரஜினி உடல்வாகுக்கு தகுந்த மாதிரி டான்ஸ் அசைவுகள் சொல்லி கொடுத்து ஆடவைக்கிறார். “சிவாஜி” படத்தில் “ஸ்பெயின் நாட்டில் ரஜினி, ஸ்ரேயா ஆடிய “ஸ்டைலு” பாடலுக்கும் பிரபுதேவா தான் டான்ஸ் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் படப்பிடிப்புக்கு வந்த ஐஸ்வர்யா ராயிடம் ரஜினியுடன் நடிக்கும் அனுபவம் பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-

நிறைய படங்களில் ரஜினி சார் ஸ்டைல் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இதற்கு முன் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது “எந்திரன்” படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. ரஜினியை பக்கத்தில் இருந்து பார்த்தேன். அவரது எளிமையும் ஸ்டைலும் என்னை வியக்க வைத்தது.

“எந்திரன்” படம் என் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.

இவ்வாறு அவர் கூறினார்

செவ்வாய், 25 நவம்பர், 2008

விஜய் - பயோடேட்டா




source:www.kumudam.com



நன்றி,
பாமரத் தமிழன்