புதன், 20 ஆகஸ்ட், 2008

மர்மயோகி - கமல் அறிக்கை



மர்மயோகி திரைப்படம் பற்றி அவதூறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு கமல் பணிவான அறிக்கை (ஷ்ஷ்ஷ் இப்பவே கண்ண கட்டுதே)

அறிக்கை வருமாறு:

"சமீபகாலமாக நான் எழுதி, இயக்கித் தயாரிக்கும் 'மர்மயோகி' பற்றி பல புனை சுருட்டுக்கள் செய்திகளாக ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் வந்தவண்ணம் உள்ளன.

கிடைக்கும் விளம்பரத்திற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், செய்தியின் பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமையாகிறது. 'மர்மயோகி' பற்றிய பெரும்பாலான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது எங்களைப் பொருத்தவரை ஆரோக்கியமான விளம்ரமுமில்லை. உங்களைப் பொருத்தவரை நேர்மையான செய்தியும் இல்லை.

ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட் சாய்மீரா குரூப்பும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கையில், பத்திரிக்கை வாயிலாகப் பங்காளிகள் கூடுவது நல்லதல்ல. இருவர் சம்மதத்துடன் கூடிய உறவுகளே சுமுகமாகவும் சந்தோஷமாகவும் விளங்கும். ஒருதலை உறவு சங்கோஜங்களையே விளைவிக்கும்.

செய்திகளை முந்தித் தருவதிலும் முதலில் தருவதிலும் உள்ள ஆர்வத்தைவிட, ஆதாரத்துடனும் நேர்மையுடனும் செய்திகளைச் சேகரிப்பதே நம்பகமான பத்திரிகைக்கு அழகு என்பதை நீங்கள் உணர்ந்துள்ளது போலவே நானும் ஆதரமற்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது என்பதே என் தாழ்மையான கருத்து. நவீன கார்ப்பரேட் யுகத்தில், பத்திரிகை வாயிலாக வியாபாரம் பேசுவது தொழில் ஒழுக்கமல்ல.

இத்தகைய உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாமல் தவிர்த்த ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய செய்திகளை வெளியிட்ட நாள், வார இதழ் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். செயதிகளை எங்களிடமிருந்து பெறுவதற்கான எல்லா சாளரங்களும் தயார் நிலையில் உள்ளன. எங்கள் செய்தித் தொடர்பு பிரிவுகளின் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருக்கும். அந்தப் பிரிவுகள் செய்திகள் சொல்லாதபோது சொல்வதற்கு தற்போது ஏதுமில்லை என்ற பொருளையே பத்திரிக்கை நண்பர்கள் கொள்ளவேண்டும்.

பல மில்லியன் டாலர்கள் செலவில் தயாராகும், பன்மொழிப் படமான 'மர்மயோகி' உலக தரப்படமாகவும் உங்களுக்கு பரிமாறப் படவேண்டும் என்பதில் ராஜ்கமல் நிறுவனமும் பிரமிட் சாய்மீரா குரூ்பபும் பேரார்வத்துடன் இயங்கி வருகின்றன. விரைவில் துவக்கவிழா பற்றிய செய்திகளை அறிவிப்போம். 'மர்மயோகி'யை மக்களுக்கு நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எமது மட்டுமல்ல, உமதும் தான் என்பதை என் பத்திரிக்கை தோழர்களுக்கு நினைவுறுத்துகிறேன்"

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

தசாவதாரம்

உலகத்தரம் வாய்ந்த தமிழ் சினிமா தசாவதாரம் பற்றி ஒரு சிறிய அலசல்.



கதை, திரைகதை, வசனம்: கமலஹாசன்.
இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்.
நடிப்பு: கமலஹாசன், அசின், மல்லிக ஷெராவத் மற்றும் பலர்.
இசை (பாடல்கள் மட்டும்): ஹிமேஷ் ரேஷ்மையா.
பின்னணி இசை: தேவி ஸ்ரீ பிரசாத்.
ஒளிப்பதிவு:ரவிவர்மன்.
தயாரிப்பு: ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

நிறைகள்:
-------------

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முதலாக 10 கதாபாத்திரங்களில் ஒரே நடிகரே நடித்து பெரும் சாதனை படைத்துள்ள கமலஹாசன் அவர்களுக்கு ரசிகர்கள் என்றும் அழியா புகழ் கொடுக்க போவது உறுதி.

சாவோஸ் தியரியிலிருந்து ஆரம்பித்து ஜார்ஜ் புஷ் வரை சென்று தாக்கி இருக்கும் கமலஹாசனின் சூசகமான திரைக்கதை சற்று ஆழந்த சிந்தனை உடைய ரசிகர்களுக்கு மட்டுமே புரிய கூடியது.

பல்ராம் நாய்டு கதாபாத்திரம் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் மிகவும் முக்கியமானது. பூவராகன் கதாபாத்திரத்தில் வருவது கமலஹாசன் தான் என்பது ரசிகர்களுக்கு புரிய சற்று நேரம் எடுத்தது (அவ்வளவு நேர்த்தியான ஒப்பனை மற்றும் கமலின் பாவனைகள்(Body language).

அனைத்து கதாபாத்திரங்களிலும் கமலஹாசனின் நடிப்பு மட்டுமின்றி அவரது முழு செயல்களும்(Body language)கவனிக்க தகும் வகையில் இருப்பது சுவாரசியம்.

வசனகர்த்தா கமலுக்கு தனி பாராட்டு விழா நடத்துமளவிற்கு அருமை. திரைகதை உலக தரத்திற்கு இருப்பது பெருமை.

கே.எஸ்.ரவிக்குமார்
-----------------------

கே.எஸ்.ரவிகுமாரை ஒரு வெற்றிப்பட இயக்குனராகவும், ஒரு மசாலா இயக்குனராகவும் பார்த்து வந்த ரசிகர்களுக்கு, கமலஹாசனுடன் அவர் இணையும் படங்கள் சற்று வித்யாசமான அனுபவமாகவே இருந்து வந்தது. அவரது கடின உழைப்பு கமல்ஹாசனின் நேர்த்தியுடன் இணையும்பொழுது அது ஒரு முழு நீல நகைச்சுவை படமாக இருந்தாலும் கூட கூர்ந்து கவனிக்க வேண்டிய அளவிற்கு அவ்வளவு கூர்மையான படமாக அமைந்து வந்தது. முதன் முதலில் கமலஹாசன் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து இது போன்ற ஒரு சரித்திரத்தில் இடம்பெருமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் பனி புரிய முடிவேடுதத்தின் காரணம் ரவிகுமாரின் ஒப்பற்ற உழைப்பின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையே ஆகும். இந்த நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் ரவிகுமார் அவர்களின் உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது. அது மட்டுமின்றி கமலின் தீராத சினிமா மோகத்தால் அவரது படங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டை மீறி போவது வழக்கம். இதனால் கமலஹாசனுடன் அவரது திரைபடத்தின் தயாரிப்பளர்களுக்கும் மனவருத்தம் ஏற்படும் வகையிலேயே இருந்து வந்தது. இப்படத்திலும் குறிப்பிட்ட பட்ஜெட்டையும் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் தாண்டினாலும், படத்தை அற்புதமாக முடித்து குறைந்த மன வருத்தங்களுடன் செவ்வனே படத்தை வெளியிட்டிருப்பது கே.எஸ் ரவிகுமாரின் தனி திறமை. இப்படத்தை வேறு யாரவது இயக்கியிருந்தால் அவர்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டு வேறு பல இயக்குனர்கள் மாற்றப்பட்டு கடைசியில் கமலகாசனோ அல்லலது அவரது உதவியாளர்களோ முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சாதாரணமான படங்களை இயக்கும்பொழுது ஏற்படும் சிக்கல்களை சுலபமாகவும் சாதுர்யமாகவும் தீர்த்து குறிப்பிட்ட தேதிக்கு முன்பே படங்களை முடித்து படத்தை வெளியிடுவதில் வல்லவரான கே.எஸ்.ரவிக்குமாருக்கு இது சற்று சவாலான படமாக அமைந்திருக்கும். 10 வேடங்களில் கமல் நடிக்குபோழுது ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளை அற்புதமாக கையாண்டு கமலஹாசனின் சினமா மோகத்திற்கும் தீனி போட்டு, சாதரண ரசிகர்களும் புரிந்துகொள்ளும் வகையிலும், உலகத்தரத்திற்கு குறையாமலும் படத்தை இயக்கியிருக்கும் கே.எஸ் ரவிகுமறிற்கு ஆஸ்கர் விருது கிடைத்தாலும் இணையாகாது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் பனி பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

கமலஹாசனின் நடிப்பிற்கும் திறமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் எந்த நாட்டிலும் உயர்ந்த விருது இதுவரை இல்லை என்பது நாம் அறிந்த உண்மை.

இப்படி ஒரு படத்தை பொறுமையுடன் உருவாகிய தயாரிப்பாளர் திரு ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பெரும் பேரமை உண்டு.

குறைகள்:
-------------
ஒப்பனை சிலநேரங்களில் ஒளிப்பதிவுடன் ஒட்டாமல் இருப்பது ஒளிப்பதிவாளரின் குற்றமா அல்ல ஒப்பனயலரின் குற்றமா என்பது தெரியவிள்ளயனாலும் அது சற்று உறுத்தலாகவே தெரிகிறது.

சில கதாபாத்திரங்கள் கணக்கை நேர் செய்வதற்க்காக உருவாக்க பட்டது போன்று ஒரு உறுத்தல் உள்ளது.

படம் வருவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்ததால் இரு வகை கருத்துக்கள் ரசிகர்களிடம் உள்ளது. மேல் தட்டு ரசிகர்களை ஓரளவிற்கு கவர்ந்திருபினும் சற்று நடுதரத்ரிகு கீழ் உள்ள ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்திருப்பது உண்மை. ரசிகர்கள் எதிர்பார்பிற்கு தசாவதார குழு ஒன்றும் செய்ய முடியாது என்றாலும். இனி வரும் படங்களாவது மணிரத்தினத்தின் முறையை பின்தொடர்ந்தாள் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமில்லாமல் வந்து சத்தமின்றி வெற்றி பெரும்.

இதுபோண்ட்ர் மிகசிர்யா குறைகளை தாண்டி சரித்திரத்தில் இடம்பெறும் உலக தரம் வாய்ந்த தமிழ் சினிமா தசாவதாரம்.

நன்றி - கமலஹாசன், ஆஸ்கர் ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தசாவதார குழுவிற்கு.

நன்றியுடன்
பாமர தமிழன்.

image source:www.wikipedia.org.