புதன், 25 மார்ச், 2009

பொருளாதார நெருக்கடியால் தாமதம் மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடமாட்டேன் -கமலஹாசன்

Source: http://www.maalaimalar.com/2009/03/11150843/CNI0460110309.html

நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-


கேள்வி:- புது நடிகர்கள் நிறைய வருகிறார்களே?

பதில்:- இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆட்சி நீடித்தது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.
கே:- நடிகர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்களே? நீங்கள் வருவீர்களா?

ப:- நான் நடிகன் எனக்கு தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்கு தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

கே:- உங்கள் படங்கள் ஆஸ்கார் விருது பெறாததற்கு காரணம் என்ன?

ப:- எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது. ஏ.எஸ்.ஐ. முத்திரை தேவைஇல்லை.

கே:- ஹாலிவுட் படங்களில் நடிப்பீர்களா?

ப:- எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.

ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

கே:- மர்மயோகி என்ன ஆனது?

ப:- பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் பாக்கி உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: