வியாழன், 26 மார்ச், 2009

புதுமுக நடிகர்களுக்கு கிராக்கி வசூலை குவிக்கும் “சிறு பட்ஜெட்” படங்கள்

Source=http://www.maalaimalar.com/2009/03/25130156/CNI0340250309.html

தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் “சிறு பட்ஜெட்” படங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரை செலவிட்டு எடுத்து பல படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தின. தயாரிப்பாளர்கள் போட்ட முதலில் பாதி கூட எடுக்க முடியாமல் திணறினர். முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு வாரத்திலேயே சுருண்ட கதையும் உண்டு. ஆனாலும் பல கோடிகளை கொட்டி பெரிய படங்கள் எடுக்கவே புதிது புதிதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் முளைத்து ஒரு படத்திலேயே சூடு கண்டு ஒதுங்கின.

சிறு பட்ஜெட்டில் படங்கள் எடுக்க யாரும் துணியவில்லை. “சுப்பிரமணியபுரம்” படத்தின் வெற்றி திரையுலகையே புரட்டி போட்டது. “வெண்ணிலா கபடி குழு” படமும் நன்றாக ஓடியது. மேலும் பல சிறிய படங்கள் விநியோகஸ்தர்கள் கையை கடிக்காமல் சிறிதளவும் லாபம் ஈட்டி கொடுத்தன.

இதையடுத்து சிறு பட்ஜெட் படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அப்படங்களில் நடிக்க புதுமுக நடிகர்களுக்கும் கிராக்கி வந்துள்ளது.

ரோஹன் கிருஷ்ணா இயக்கிய “பட்டாளம்” படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டா போட்டி உள்ளது. குங்கும பூவும் கொஞ்சு புறாவும் என்ற சிறு பட்ஜெட் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


“அன்றொரு நாள்”, “சிரித்தால் ரசிப்பேன்” “முன்தினம் பார்த்தேனே”, “கதிர்வேல்”, “ஓடிப்போலாமா”, “சங்கரா”, “ரேணி குண்டா”, “குலசாமி”, “பிரம்மதேவா” “ஆடாத ஆட்டமெல்லாம்”, “பலம்”, “ரயிலு”, “வானம் பார்த்த சீமையிலே”, “தோரணம்”, “என் பெயர் குமாரசாமி”, “சங்கரன்கோவில்” உள்பட 75 சிறு பட்ஜெட் படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன. குறைந்த சம்பளம், தயாரிப்பில் சிக்கனம் என எடுக்கப்படும் இப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் முண்டியடிக்கிறார்கள். “சேட்டிலைட்” உரிமை மூலமும் இவை பணம் பண்ணி கொடுக்கின்றன.

கருத்துகள் இல்லை: