செவ்வாய், 26 அக்டோபர், 2010

தியேட்டர்கள் தட்டுப்பாட்டால் 70 புது சினிமா படங்கள் முடக்கம்

source:http://www.maalaimalar.com/2010/10/25114625/cinema.html


தியேட்டர்கள் தட்டுப்பாட்டால் 70 புது சினிமா படங்கள் ரிலீசாக முடியாமல் முடங்கியுள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்து சிறிய பட்ஜெட்டில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டன. பெரிய நடிகர்கள் படங்கள் அவ்வப்போது மொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமித்ததால் இவைகளை ரிலீஸ் செய்ய முடியவில்லை. மாதம் தோறும் எண்ணிக்கை கூடி தற்போது 70 படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கி யுள்ளன. இந்த படங்களை இந்த ஆண்டுக்குள்ளேயே ரிலீஸ் செய்து விட வேண்டுமென அப்படங்களின் தயாரிப்பாளர்கள் பெரு முயற்சி எடுக்கின்றனர். ஆனாலும் அவர்களால் தியேட்டர்களுக்கு கொண்டு வர முடியவில்லை. காரணம் சிறு படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தியேட்டர்கள் கிடைக்காத தால் அவற்றை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் படங்கள் முடங்கி கிடக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் பெரிய நடிகர்கள் படங்களை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களிலும் சிறு பட்ஜெட் படங்களை இதர நாட்களிலும் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால் அது கடை பிடிக்கப்படவில்லை.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெரிய ஹீரோக்களின் படங்களில் ரிலீசுக்கு வரிசை கட்டுகின்றன. எனவே இரு மாதங்களுக்குள் 70 படங்களும் தியேட்டர்களை எட்டி பார்க்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பெரிய பட்ஜெட் படங்களில் தனுசின் “உத்தமபுத்திரன்” தீபா வளிக்கு ரிலீசாகிறது. அவர் நடித்த “ஆடுகளம்”, “மாப்பிள்ளை” படங்களில் ஏதேனும் ஒன்றை டிசம்பர் 24-ல் ரிலீஸ் செய்ய திட்ட மிட்டுள்ளனர்.

ஆர்யா நடித்த “ரத்த சரித்திரம்” படம் நவம்பர் ரிலீசாகிறது. கார்த்தி நடித்த “சிறுத்தை” படத்தை டிசம்பர் 3 அல்லது 10-ந் தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஜீவாவின் “சிங்கம்புலி” நவம்பர் 19 அல்லது 26-ந்தேதியில் வெளியிட முடிவாகியுள்ளது.

ஆர்யா நடித்த “சிக்கு புக்கு” படம் நவம்பர் 19-ந் தேதி வெளியாகிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் எங்கேயும் காதல் படம் டிசம்பர் 3-ந்தேதி ரிலீசாகிறது.


கமலஹாசனின் மன் மதன் அம்பு டிசம்பர் 17-ந்தேதி வெளியாகிறது. விஜய் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளி வருகிறது. சிம்பு நடிக்கும் வானம் படம் டிசம்பர் 31-ந்தேதி ரிலீசாகிறது.

கருத்து

தமிழ் நாட்டில் சென்னை உட்பட பல திரையரங்கங்கள் தரமற்று இருக்கின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் பல திரையரங்குக மூடப்படும், திரையரங்கிற்கு தட்டுபாடு அதிகரிக்கும்.

அனால் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திரு.அபிராமி ராமநாதன் சொல்வது போல் தரமான, அதி நவீன வசதிகொண்ட, திரைஅரங்குகள் அதிகரித்து இந்த தட்டுபாட்டை போக்கும், அனால் சற்று காலதாமதமாகும்.

முக்கியமாக திருச்சி போன்ற சிறுநகரங்களில் உள்ள திரையரங்கங்கள் தங்களை மேம்படுதிக்கொள்ளவிட்டால் சில வருடங்களில் அவை திருமண மண்டபங்களாக மாறிவிடும்.

கருத்துகள் இல்லை: